அமெரிக்கா 2 கடலோர காவல் கப்பல்களை ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
ரஷ்யா உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அருகில் சமீபகாலமாக குவித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த எங்களுக்கு எண்ணமில்லை. ரஷ்யாவிற்கு உட்பட்ட இடங்களில் தான் நாங்கள் படைகளை குவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.