கோவையில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தென்னகத்தின் மான்சிஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம், பல்துறை மருத்துவம் கிடைக்கும் ஊர், மாநிலத்தின் கல்வி தலைநகர் என எத்தனை எத்தனை பெருமைகள் இந்த மண்ணுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லாம் அழைத்து செம்மொழி மாநாட்டை அவர் நடத்தியதும் இங்குதான். வியத்தகு பெருமை கொண்ட கோவை மாநகருக்கு வருகை தந்திருக்கிறார் மாண்புமிகு தளபதி அவர்கள்.
கொரோனா உடை தரித்து துணிச்சலுடன் களம் புகுந்து நோயை கட்டுபடுத்தியதை நாடே பார்க்கிறது. சென்னையே மூழ்கும் என்றார்கள், என்ன செய்திடும் வெள்ளம் என்று ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழன்று முதல்வரே களத்தில் நின்று மக்களை காத்தவர் நம் முதல்வர் அவர்கள், தலைமையின் உழைப்புக்கு முன்னாள் கொரோனாவும் நிற்பதில்லை, வெள்ளமும் தாங்குவதில்லை. என்ன தவம் செய்தோம் இப்படி ஒரு தலைவரை பெற நினைக்க செய்கிறார் நம் முதல்வர் அவர்கள்.
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆவின்பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள், ஸ்டெர்லைட் போராளிகள் குடும்பத்திற்கு அரசு வேலைகள், வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என எத்தனை எத்தனை திட்டங்கள் இந்த ஆறு மாதங்களில், மகளிருக்கு திட்டங்கள், மாணவர்களுக்கும் திட்டங்கள், திருநங்கையினருக்கும் திட்டங்கள், தொழில் துறையினருக்கும் திட்டங்களுக்கும், உழவருக்கும் திட்டங்களுக்கும், உலகில் உகந்தவர்களுக்கும் திட்டங்கள், உறக்கமின்றி யோசிக்கிறார், யோசிப்பதையே உடனடியாக செயல்படுகிறார்.
இது சாமானியர்களின் ஆட்சி, அனைவருக்குமான ஆட்சி, இதெல்லாம் நடக்காதா ? என்று நினைத்தது எல்லாம் நடக்கிறது, இதெல்லாம் சாத்தியமா என்று வியந்தது எல்லாம் நடக்கிறது. மருத்துவமனை, காவல் நிலையம், மின்சார அலுவலகம், பேருந்து, தேநீர் கடை என எங்கும் சாமானியர்களுக்கு சாமானியராக, தலைவர்களுக்கு தலைமகனாக கோளொற்றி நிற்கிறார் நம்முடைய முதல்வர் அவர்கள். ஏழை எளியவர்களின் காப்பாளனும் இவர் தான், சமூக நீதியின் காவலரும் இவர் தான். பத்து ஆண்டுகள் காத்து இருந்த தமிழகம் அதற்கான தலைவனை கண்டறிந்தது, ஐம்பது ஆண்டுகள் உழைத்து கொண்டிருக்கும் தலைவர் தம் கனவுகளெல்லாம் பலிக்க செய்கின்றார்.
நமக்கான மன்னவர் மணிசூட குறைகளெல்லாம் தீரும் என மக்கள் நம்பிக்கை கொள்வது இயல்புதானே, மாநகராட்சியின் 100 இடங்கள், நகரங்கள் பேரூராட்சியில் 50 இடங்கள் என மொத்தம் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டங்களில் 1 லட்சத்து 47 ஆயிரம் மனுக்களை தந்து இருக்கின்றார்கள், சென்ற இடமெல்லாம் குவிகிறது கூட்டம். திக்கெட்டிலும் ஒலிக்கிறது நம்பிக்கையின் ஒளி, தளபதியே விடியல் தர வந்தவரே என்று உறுதி கொண்டு இருக்கிறார்கள் மக்கள். நம்பிக்கை சிறிதும் பொய்த்திடவில்லை, தலைமையிடம் விவரங்களை சொன்னோம் தீர்வு காண நேரில் வருகிறேன் என்றார்.
அவரது கண்ணசைவிலேயே 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காண்பது இந்த வ.உ.சி மைதானம், தளபதியின் ஒரு அசைவில் ஒவ்வொரு குறைகளையும் களைவோம். மே 7-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கான விடியல் பிறந்தது, இன்று கோவை மக்களுக்கான திருநாள், இது வ.உசி பூங்காவின் திருநாள், கோவை செழிக்கிறது நம் தளபதியின் ஆட்சியில் என புகழ்ந்து தள்ளினார்.