தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கீழ் தாக்களில் வெறும் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து சற்று கூடுதலாக இருப்பதால் விலை குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.140க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.90-110 வரை விற்பனை செய்யப்படுகின்றது.