டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க் ரூ.7,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பத்திரங்கள் தாக்கலின் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அந்நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு 9,34,091 பங்குகளை விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவை ரூபாய் 7,400 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 6-ஆம் தேதி அன்று “தனது 10 சதவிகித பங்குகளை சமூக வலைதள பயனாளர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விற்க விரும்புவதாகவும், பெரும்பாலானோர் விற்பனைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும்” பதிவிட்டிருந்தார்.
அந்த நாளிலிருந்து இன்றுவரை எலான் மஸ்க் 9.2 மில்லியன் ( ரூ.7,300 கோடிக்கு அதிக மதிப்பிலான ) பங்குகளை விற்றுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமான 9 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகளை வரிவிலக்கினை பெறும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விற்பனை செய்துள்ளார்.