Categories
மாநில செய்திகள்

“தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்”…. சசிகலா கோரிக்கை….!!

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை, வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் ஏழை எளிய மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து மழைநீர் தேங்கியதால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வர மத்திய அரசு உரிய நிவாரணம் தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |