நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் போலி சான்றிதழ் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் களப்பணியாளர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.