Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று (நவ.25) தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாயப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |