சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மக்களின் அடிப்படைத் தேவைகளை கண்காணிக்க கேரள அரசின் ஒத்துழைப்புடன் இரண்டு அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.