Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “வீண் பேச்சு மட்டும் வேண்டாம்”.. தன்னம்பிக்கை தைரியம் கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பிறரிடம் வீண் பேச்சு மட்டும் வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலமாக இருக்கும். இன்று உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள் அது போதும்.

இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் மகரம் ராசிக்காரர்கள் எப்பொழுதுமே கவனம் கொள்வது நல்லது. இன்று உங்களுடைய வசீகர தன்மையால் அனைவரையும் கவரக் கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

கூடுமானவரை சக மாணவரிடம் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்களை சிறப்பானதாக்கி கொடுக்கும். காரியங்களில் வெற்றி அடைய செய்யும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |