சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது.
தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார்,செங்கோட்டையன், கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் தொடங்கிய உடன் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேச தொடங்கினார். அவர் பேசுவதை எதிர்த்து பலர் கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் அன்வர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து அன்வர் ராஜாவை நோக்கி சிவி சண்முகம் ஆவேசமாக பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக வழிகாட்டுதலுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவபதி கட்சித் தலைமைப் பொறுப்புகளில் விடுபட்ட சாதியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி மழை வெள்ள பாதிப்பு மற்றும் கொடுத்த வாக்கை நிறைவேற்றாதது போன்றவை திமுக வுக்கு சரிவை கொடுத்துள்ளது. இந்த சரிவை பயன்படுத்தி அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம் கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கைக்கு செல்லக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கூறினார். அவன் பின்னால் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க கையெழுத்து இடுவதாகவும் கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை நமக்கு தலைவர்கள் ஆவார் என பன்னீர்செல்வம் கூறினார்.