மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அதனால் புதுக்கோட்டை, திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று மதியம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.