Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 43 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 264 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |