தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இந்நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் உள்ள சுமார் 700 ஆயுள் தண்டனை கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி 700 பேரை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.