Categories
மாநில செய்திகள்

JUSTIN : மோசமடைந்த வானிலை… திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட தூத்துக்குடி விமானம்…!!! 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்தை பாதிப்பை சந்தித்துள்ளன. இன்று காலை முதல் பல மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானத்தில் சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |