பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் தற்போது வரை 7 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 3வது வைல் கார்டு என்ட்ரியாக இத்தனை நாள் வருவார் என்று சொல்லப்பட்ட நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார். சிபி, அக்ஷரா இடையே ஏற்பட்ட மோதல்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு விளையாடும் போட்டியாளர்களை பற்றி தங்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர். இது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.