தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் இன்று பல்லடம் சட்டமன்றம் தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4 உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள். அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அதன் பிறகு உரிய மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.