சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக நடைமேடைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடைமேடை டிக்கெட் 10 ரூபாயாக இருந்தது, அதன்பிறகு 50 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ள காரணத்தினால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கொரோனா காலத்தில் ரூபாய் 50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த ரயில் மேடை கட்டணம் தற்போது மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.