Categories
தேசிய செய்திகள்

12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்…. மேகாலயா அரசியலில் பரபரப்பு ….!

மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் முதல்வர் கன்ராட் சங்மா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. முகுல் சங்மா தலைமையில் அதிருப்பதி இருந்ததாக தகவல் வெளியாகியது. அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர்.

எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் 12 எம்எல்ஏக்களின் பட்டியல் சபாநாயகரிடம் வழங்கப்பட்டு இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 12 எம்.எல்.ஏக்கள் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியது, காங்கிரசின் 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் ஒரு கட்சியின் மொத்த எம்எல்ஏக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் வேறு கட்சியில் இணையவதை கட்சித் தாவல் சட்டம் அனுமதிக்கிறது. எனவே திரிணாமுல் காங்கிரசின் இந்த 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். .

Categories

Tech |