தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் வியட்நாம், தாய்லாந்து அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 45ஆவது நிமிடத்தில் வியட்நாம் வீராங்கனை டுவாங் தி வான் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டம் முடிவதற்கு மூன்று நிமிடங்கள் இருந்த நிலையில், தாய்லாந்து வீராங்கனை டங்க்டா, ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். இதனால், இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.