Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை கட்டையால் தாக்கிய போலீஸ் ஏட்டு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கவுஜியா நகரில் பால்ராஜ்-குடியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பால்ராஜ் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப தகராறு கோபமடைந்த பால்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து குடியாவின் தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த குடியா மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குடியாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடியா கொடுத்த புகாரின்படி ஏட்டு பால்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொடூரமாக தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று பால்ராஜ் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவருடைய மனைவி குடியா உட்பட 4 பேர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |