ஷபானா திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செம்பருத்தி”. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடித்து வரும் ஆரியனை திருமணம் செய்தார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். அதன்படி, இவர் தனது கணவரின் பெயரையும் சேர்த்து தன் பெயரை மாற்றியுள்ளார்.