Categories
மாநில செய்திகள்

Breaking:  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |