தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.