Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி…. பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு….!!

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 2 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற மேலும் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.எஸ் சைத்யா கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆவார்.

மேலும் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியில் எந்த பகுதிக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் இந்த வீரர்களுக்கு அறிகுறி எதுவும் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அதிகாரிகள் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்தனர் எனவும் அவர்கள் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |