Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து…. டிரைவர் உள்பட 14 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு பேருந்து ஒன்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை டிரைவர் ராகவன் ஓட்டி வந்துள்ளார். இந்தப் பேருந்து அதிகாலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு 6 வழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து பாலத்தின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இது குறித்து அவர்கள் அவினாசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த 14 பேரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் ராகவன் தூக்க கலக்கத்தில் ஓட்டி வந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |