வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக வெளிப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்த சங்கத்தில் கடன் பெற்ற 12 பேர் தங்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். இதனை நாள்வழி பதிவேட்டில் மட்டும் வரவு வைத்துவிட்டு ரொக்க பதிவேட்டில் வரவு வைக்காமல் இருந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்தபோது சங்க செயலாளர் ராஜா இதில் இருந்து 33 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. எனவே மேல்அதிகாரிகள் ராஜாவை நிரந்தர பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தி ராஜா மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.