Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சாலையில் ஆறாக ஓடிய டீசல்…. போலீஸ் விசாரணை….!!

தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் கால்நடை தீவனம் மற்றும் முட்டை உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு லாரியை புறப்பட்டு வந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி அதிகாலை 5.30 மணிக்கு காங்கேயம் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் எஞ்சின் மற்றும் உதிரிபாகங்கள் உடைந்து பலத்த சேதமடைந்தது. மேலும் தடுப்புச்சுவரில் லாரி மோதிய விபத்தில் முன் சக்கரம் தனியாக கழன்று விழுந்தது. இதனைத் தொடர்ந்து முன்புற இடது பக்கத்தில் இருந்த டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஆறாக ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராமசாமி விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |