நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020 முதல் 2021 வருடத்திற்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் குழந்தை பெறும் வீதம் 2 சதவீதமாக குறைந்து இருப்பதால் நாட்டின் மக்கள்தொகை இனிவரும் காலங்களிலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற வீதம் தற்போது 878 பெண்கள் என்று கணிசமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் தலைமுறையும் முரட்டு சிங்கிளா தான் இருக்க வேண்டுமா? என்று கவலை கொள்ளும் அளவிற்கு பாலின விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் கருக்கலைப்பு கஉள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்தால் இதனை தவிர்க்கலாம் என்று கூறப்படுகின்றது.