Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 உயர்த்தப்பட்டது.

அதன்படி சென்னை மும்பை உள்ளிட்ட 250 ரயில் நிலையங்களில் கடந்த 2020 மார்ச் முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலில் இருந்தது. கொரோனா காலகட்டத்தில் ரயில் நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க கூடிய வகையில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் ரூ.50 உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ.10 குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |