வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கொள்ளியூர் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்து வந்திருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
அப்போது ஆனந்த் திடீரென அதே பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.