Categories
கிரிக்கெட்

“உன்னை நினைச்சா பெருமையா இருக்கு”…. ! ஸ்ரேயாஸ்க்கு பாண்டிங் வாழ்த்து ….!!!

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார் .அதேசமயம் இன்றைய போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி உள்ளார் .இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது  டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” கடந்த சில வருடங்களாக நீங்கள் செய்த கடின உழைப்புக்கு தற்போது அணியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு நீங்கள் தகுதியானவர்கள் .இது ஆரம்பம் மட்டுமே .உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் “என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |