Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களே…! இதான் முக்கியம்…. கவனமா இருங்க…. ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி அனைத்து பெட்டிகளையும் திறந்தோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். மக்களிடம் பேட்டி கேட்கின்ற போது, அவர்கள் சொல்கிறார்கள்… ஸ்டாலினிடம் மனு கொடுத்தேன்.

100 நாட்களில் அவர் தீர்த்து வைத்து விட்டார் என்று பேட்டி கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில்  நிறைவேற்ற இயலாத கோரிக்கையாக இருந்தாலும், அது தொடர்பாக மனு கொடுத்தவர்களிடம் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். அத்தகைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் இப்பொழுது மனு கொடுத்து  கொண்டு இருக்கின்றார்கள்.

வருகின்ற வழியெல்லாம் வரவேற்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆங்காங்கே சில தோழர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மனுவை தூக்கி தூக்கி காமிச்சு கொடுத்தார்கள். அங்கே நின்று அந்த மனுக்களையெல்லாம் வாங்கி கொண்டு தான் வந்து கொண்டு இருக்கின்றேன். இவை அனைத்து பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை மீண்டும் இந்த விழா மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மிகப்பெரிய திட்டங்களை, பல கோடி மதிப்பிலான திட்டங்களை நாங்கள் போட்டாலும், இதுபோல் ஒவ்வொரு தனி மனிதனுடைய கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுவது தான் முக்கியம். அப்படி நிறைவேற்றி தரவேண்டும் என்று நான் அமைச்சர்களுக்கெல்லாம் தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டு இருக்கின்றேன், தொடர்ந்து கேட்டுக் கொண்டும் இருக்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |