திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.
அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. அவர்கள் சனாதன வெறியர்கள். அவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். நீங்கள் நினைக்கலாம் அரசியல்வாதி என்றால் ஏதாவது பதவி இருந்தால் போதும் என்று…. ஆனால் பதவி என்பது எதற்காக, அதிகாரம் என்பது எதற்காக, ஆட்சி என்பது எதற்காக என்றால் அவர்கள் விரும்புகின்ற அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும்.
அவர்கள் விரும்பும் 2,000 வருடங்களுக்கு முன்னால் இருந்த சமூக ஒழுங்கை மீண்டும் இங்கே உறுதிப்படுத்த வேண்டும். நிலைப்படுத்த வேண்டும். அதற்கு தான் உங்களுக்கு பொலிட்டிக்கல் பவர் வேண்டும். மேலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் கனவு திட்டங்களை வேண்டுமானால் இங்கே இந்து என்கின்ற உணர்வு தூண்டப்பட வேண்டும், வலுப்பைற வேண்டும், அது மென்மேலும் நிலைபெற வேண்டும். அதற்கு அவர்கள் கையாளக்கூடிய யுக்திகள் தான் கிறிஸ்தவ எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு என குற்றம் சாட்டினார்.