Categories
மாநில செய்திகள்

பெண்களே…! நோட் பண்ணிக்கோங்க…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகிறது.

இந்த நிலையில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி வாட்ஸ்அப் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு6374810811 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார். 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க “1098” உதவி எண்  உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |