Categories
மாநில செய்திகள்

BREAKING : விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழை காரணமாக சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நெல்லை, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |