அமெரிக்கா 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் திட்டங்களுக்கு துணை போகின்றன என்று கூறி வர்த்தகத் தடைப்பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜப்பான், பாகிஸ்தான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 27 நிறுவனங்களும் அமெரிக்காவின் இந்த தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை கையகப்படுத்தும் முயற்சியுடனும், சீன ராணுவத்திற்கு உதவும் நோக்கத்துடனும் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.