செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருக்கிறது செங்கல்பட்டு மாவட்டம்