பெலாரஸ் பாதுகாப்பு படையினர் அந்நாட்டில் இருந்து போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கும் அகதிகளுக்கு உதவும் விதமாக அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போலந்து நாட்டு வீரர்களின் கண்களில் அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் வழியாக சென்று ஐரோப்பாவில் தஞ்சம் அடைவதற்காக போலந்து ஊடுருவும் அகதிகளுக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் லேசர் மற்றும் டார்ச் லைட்டுகளை செரெம்சா என்ற கிராமம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலந்து வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அகதிகளுக்கு உதவும் வகையிலும் வீரர்களின் கண்களில் அடித்துள்ளனர்.
இவ்வாறு பெலாரஸ் வீரர்களின் உதவியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அகதிகள் போலந்து நாட்டிற்குள் எளிதாக ஊடுருவி வருவதாக அந்நாட்டின் வீரர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பெலாரஸ் ராணுவவீரர்கள் அகதிகளுக்கு உதவும் சில ஆதாரங்களையும் போலந்து வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.