Categories
மாநில செய்திகள்

கேவலமா இருக்கு…! அருவருப்பா இருக்கு…. வெட்கி தலைகுனிந்த ஸ்டாலின் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தியும் கேள்விப்படும்போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

அறத்தையும், பண்பாட்டையும் அதிகம் பேசுகின்ற ஒரு சமூகத்தில், கல்வியிலும் –  வேலைவாய்ப்பிலும் முன்னேறும் ஒரு நாட்டில், அறிவியலும் – தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான அருவருப்பான செயல் களும் நடக்கத்தான் செய்கிறது என்பது  வெட்கி தலைகுனிய வைக்கிறது. இதை பற்றி பேசாமல் இருக்க முடியாது,  இருக்கவும் கூடாது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |