Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகளுக்கு…. அரசு செம ஹாப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், வழிகாட்டி பதிவேடு, பாய், போர்வை மற்றும் ஒவ்வொரு மாதமும் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,100 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழக அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நடப்பு கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம் விருதாச்சலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா 50 மாணவிகள் வீதம் தங்கி பயில ஏதுவாக 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விடுதி அமைப்பதற்கான ரூ.1.6கோடி நிதியை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |