ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசியை மூன்று வார இடைவெளியில் 10 மைக்ரோகிராம் வீதம் குழந்தைகளுக்கு போட வேண்டும்.
இருப்பினும் வருகின்ற 20-ஆம் தேதி தான் இந்த தடுப்பூசி டெலிவரி செய்யப்படும் என்பதால் அடுத்த மாத இறுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பைசர் பயோன்டெக்கின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடத் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பயோன்டெக் நிறுவனம் முதல் கட்டமாக ஜெர்மனிக்கு 24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.