Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “துணிவு தன்னம்பிக்கை கூடும்”.. லாபம் பன்மடங்கு உயரும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்துசேரும். கூட்டாளிகளால் குழப்பம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

லாபம் பன்மடங்கு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் கொஞ்சம் கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகளும் கிடைக்கும். விருந்து கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடிய சூழல் இன்று இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல் வீண் பயம் போன்றவை குறையும். இன்று அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தும் சாமர்த்தியத்தை  பெறுவீர்கள்.

இன்று உங்கள் திறமைகள் வெளிப்படும். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் பொறாமைப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |