சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். இன்று எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி எடுத்து செய்வீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகு செய்யுங்கள். இன்று மன பலம் கூடும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவு நல்லபடியாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும்.
கூடுமானவரை மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் பதில் கொடுங்கள். இன்று வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு பொறுப்புகள் இன்று கூடும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.
இருந்தாலும் ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்