Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பம்பரம்போல் சுழன்று பணிபுரிவீர்கள்”.. பாராட்டும் புகழும் கூடும்.!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாராட்டும் புகழும் கூடும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபார விருத்தி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை கொஞ்சம் கோபத்தை உருவாக்கலாம் பார்த்துக் -கொள்ளுங்கள் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறையும்  காட்டுவீர்கள். இன்று உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுங்கள். கூடுமானவரை பொறுமையை மட்டும் இன்று கடைபிடியுங்கள் அது போதும். மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.

அது மட்டுமில்லாமல் சக மானவரிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |