மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதையன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் உறவினர்கள் ஆவார். இந்நிலையில் சீனிவாசன், மாதையன், மணிகண்டன் ஆகிய 3 நபர்களும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாளையம்புதூர் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து சீனிவாசன், மாதையன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.