உருமாறிய கொரோனா பரவலை தொடர்ந்து இங்கிலாந்து அரசு 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று குறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
இந்த கொரோனாவின் அறிகுறிகள், பரவும் வேகம், தடுப்பூசி முறைகள், போன்றவை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாக அறியப்படவில்லை. எனவே இந்த வைரஸ் பரவல் குறித்து இங்கிலாந்து அரசு தீவிரமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகள் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அரசு சிவப்புப் பட்டியலில் உள்ள இந்த ஆறு நாடுகளுக்கும் இன்று நண்பகல் முதல் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவார் எனவும் அறிவித்துள்ளது.