தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். வராது என்று நினைத்துக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும். வியாபாரம் விருத்தியாக நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். அதனால் கொஞ்சம் செலவும் இருக்கும்.
பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்