இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது .நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்னும்,ஜடேஜா 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தியுள்ளார் .இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன் எடுத்திருந்த நிலையில் டிம் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.