Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இத மட்டும் யாரும் செஞ்சிடாதீங்க…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக உதவி எண்களை அறிமுகப்படுத்தி, மாணவிகள் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக அனைத்து வகுப்பறைகளிலும் கரும்பலகையில் உதவி எண்கள் ஓட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நோட்டுப் புத்தகங்களில் ஸ்டாம்ப் போல உதவி எண்களை ஒட்டுவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, படிப்பைக் காட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது குழந்தைகளின் பாதுகாப்பு தான். மாணவர்களுக்கு எதிரான செயல்களை பதிவு செய்யப் போகிறார் என்பதை கொடுத்து விட்டால் மட்டும் ஆசிரியர்களின் கடமை முடிந்துவிடாது.

அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவை என எந்த பள்ளிகளில் குற்றச்செயல்கள் நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் மீது அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை மீது முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அவரது வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆன்லைன் மூலமாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தரப்பில் இருந்து வரும் புகார்கள் எதுவாக இருந்தாலும் முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே சமயம் மாணவர்கள் தவறான புகார்களை அளிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |