Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “குடும்பத்தில் வாக்குவாதம் இருக்கும்”.. கொஞ்சம் அன்பாக பேசுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நேச மனப்பான்மை கொண்டவர்களின் உதவிகள் கிடைக்கும். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்களும் இருக்கும்.

கூடுமானவரை வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் அன்பாக பேசுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் நல்ல பலன்கள் கிடைக்கும். கூடுமானவரை இன்று வாக்கு வாதத்தை மட்டும் கட்டுப்படுத்தி விட்டால் அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு சிறுசிறு தடைகள் இருக்கும்.

தடைகளை தாண்டி இன்று நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். கூடுமானவரை ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சக மாணவரிடம் நீங்கள் கடுமையை  காட்டாமல் நடந்துகொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வெளிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |